போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை!

September 08, 2018

கெய்ரோ (08 செப் 2018): எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் 2013ஆம் ஆண்டு அதிபராக இருந்த மொஹமத் மொர்ஸி நீக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் மீதான வழக்கு விசாரணையில் இந்த தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. .

அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனையும் 47 பேருக்கு ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு 'அநியாயமானது' என்று கூறியுள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு , எகிப்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளது. மேலும் எகிப்திய பாதுகாப்பு படையினரால் குறைந்தது 817 பேர் கொலை செய்யப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் என்று மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பு கூறியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!