மக்கா மதீனா ஹரமைன் அதிவேக ரெயில் போக்குவரத்து செப்டம்பர் 24ல் தொடக்கம்!

September 13, 2018

ஜித்தா (13 செப் 2018): மக்கா - மதீனா அதிவேக ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் 24 ஆம்தேதி முதல் தொடங்கப் படுகிறது.

முஸ்லிம்களின் புனித இடங்களான மக்காவிற்கும் மதீனாவிற்கும் பேருந்து போக்குவரத்து மட்டுமே இருந்து வருகிறது. ஜித்தாவிலிருந்து விமானம் மூலம் மதீனா செல்லாலம். ஆனால் ரெயில் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இதற்கான ஹரமைன் ரெயில்வே புராஜக்ட் பணிகள் முடிவடைந்த நிலையில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான ரெயில் போக்குவரத்து வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி முறையாக தொடங்கப் படவுள்ளது. மக்காவிலிருந்து புறப்படும் ரெயில் ஜித்தா ராபிக் வழியே மதீனா சென்றடையும். அதேபோல மதீனாவிலிருந்து புறப்படும் ரெயில் ராபிக், ஜித்தா வழியே மக்கா சென்றடையும்.

தினமும் 8 ரெயில்கள் இயக்கப்படும். இது அடுத்த வருடம் 12 ஆக அதிகரிக்கப்படும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!