சவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசு!

September 14, 2018

ஜித்தா (14 செப் 2018): சவூதியில் நடந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இந்தியவை சேர்ந்த அப்துல்லாஹ் அப்துல் மத்தீன் உஸ்மானி என்ற மாணவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

ஜாமியா தஹ்ஃபிசுல் குர்ஆன் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமான பல்வேறு நாட்டினர் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண் பெற்ற இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த அப்துல்லாஹ் அப்துல் மத்தீன் உஸ்மானி முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும் 13 பேர் 95 லிருந்து 99 மதிப்பெண்கள் வரை பெற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஜித்தா கவர்னர் இளவரசர் மிஷால் பின் மாஜித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசினை வழங்கினார். அப்துல்லாஹ் அப்துல் மத்தீன் உஸ்மானிக்கு கார் ஒன்று முதல் பரிசாக கிடைத்தது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!