சவூதியில் பல்வேறு இடங்களில் பலத்த மழை!

October 31, 2018

ரியாத் (31 அக் 2018): சவூதியில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சவூதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மக்கா உள்ளிட்ட புனித இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மேலும் மலை பிரதேசங்களில் பெய்த மழையில் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் ரியாத், தபூக் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மீட்புப் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு பலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது நாடெங்கும் சீதோஷ்ன நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!