குவைத்தில் 3000 பேர் போலி விசாவில் வந்தது கண்டுபிடிப்பு!

November 03, 2018

குவைத் (02 நவ 2018): குவைத்திற்கு 3000 வெளி நாட்டினர் வேலைக்காக போலி விசாவில் வந்திருப்பதை குவைத் தொழிலாளர் அமைச்சகம் கண்டு பிடித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான சட்டதிட்டங்கள் தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 3000 வெளி நாட்டினர் போலி விசாவில் நாட்டுக்குள் வந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப் படக்கூடும் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என தெரிகிறது.

மேலும் உயர் அதிகாரிகளின் உதவியுடன் இது நடந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்றும் அல் அன்பா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!