துபாய் செல்லும் பயணிகள் அவரவர் உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு செல்வதில் தடையில்லை!

November 05, 2018

துபாய் (05 நவ 2018): ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகள் அவரவர் உடல் நல தேவைக்காக உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு செல்வதில் தடை இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்க செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், "பயணிகள் விரைவில் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வகையில் அவரவர் உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு வருவதில் சில விதிமுறைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் வருபவர்கள் முன்னதாகவே அவர்கள் உபயோகிக்கும் மருந்துகள் குறித்த விபரங்கள், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்டவைகளை www.mohap.gov.ae என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அதில் அப்லோட் செய்ய வேண்டிய ஆவணங்களை அப்லோட் செய்து விட்டால் போதுமானது. அதேபோல விமான நிலைய அதிகாரிகள் மருந்துகள் குறித்த ஆவணங்கள், மருத்துவ சான்றிதழ்கள் ஆகியவை குறித்து சோதனை செய்யும்போது அவைகளை சமர்ப்பிக்க வேண்டும். " என்று தெரிவித்தார்.

மேலும் எந்த வகையான மருந்துகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது குறித்து ஏற்கனவே உள்ள விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!