சவூதியில் வீட்டு டிரைவரை வழியனுப்பும் போது குடும்பமே செய்த மரியாதை!

டிசம்பர் 06, 2018

ரியாத் (06 டிச 2018): சவூதியில் வீட்டு டிரைவர் ஒருவர் முடித்துக் கொண்டு செல்லும் போது அவரை குடும்பமே ஆரத்தழுவி முத்தமிட்டு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தது.

35 வருடங்களாக ஒரு வீட்டின் டிரைவராக வேலை பார்த்த இந்தியர் ஒருவர் நாட்டுக்கு முடித்துக் கொண்டு சென்றார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குடும்பத்தினர். வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஓய்வூதிய தொகையும் அனுப்பி வைப்பதாக முதலாளி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!