சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

1132

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை.

மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - வாகனங்கள் மெதுவாக செல்ல உத்தரவு!

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பதினெட்டு பேர் உள் நாட்டினர் மற்றும் எட்டு பேர் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு மீறல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.