ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி!

Share this News:

மக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர் 2020) சில விதிமுறைகளின் அடிப்படையிலும் தளர்வுகள் அடிப்படையிலும் அனுமதிக்கப் பட்டனர்.

ஏற்கனவே அறிவித்தபடி இன்று நடைமுறைக்கு வந்த படிப்படியான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்காவிற் கு ஒரு நாளைக்கு சுமார் 40,000 வழிபாட்டாளர்கள் மற்றும் 15,000 உம்ரா யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஏற்கனவே முதல் கட்டமாக அக்டோபர் 4 ஆம் தேதி உம்ரா யாத்தரிக்கர்கள் அனுமதி மிகக்குறைந்த அளவில் தொடங்கியது,

உம்ரா செய்ய அனுமதி பெறுவதற்கும், மதீனாவில் உள்ள புனித மதினா பெரிய மமசூதிக்குள் நுழையவும் (Etmarna App) ஆப் வழியாக பதிவு செய்ப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்/


Share this News:

Leave a Reply