சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

1233

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்

சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இதைப் படிச்சீங்களா?:  உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு ஆணையம்நடத்திய விசாரணையின் அடிப்படையில், இதில் பணமோசடி செய்பவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 122 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.