சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தொடங்கும் சொகுசுக் கப்பல் பயணம்!

883

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் பயணம் மீண்டும் தொடங்குகிறது.

சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு பயணக் கப்பல் கோவிட் பரவல் காரணமாக ரத்து செய்யப்பாட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக திட்டத்தை இயக்கும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது

ஒருவர் 2150 ரியால்களில் தொடங்கி பல்வேறு தொகைகளில் வசதிக்கேற்ப பேக்கேஜ்களை தேர்வு செய்யலாம். ஜித்தாவிலிருந்து செங்கடல் வழியாக புறப்படும் இந்த கப்பல் யம்பு, ஜோர்டான் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கும்.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

இந்த கப்பல் பேக்கேஜில் குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அவரவர்களுக்கு உரிய வகையில் பல்வேறு தொகுப்புகள் உள்ளன. மேலும் ரிசார்ட்டுகளில் தங்கி பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்புகள் இருக்கும். நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு உணவகங்கள், பெரிய தியேட்டர்கள், விளையாட்டு மண்டலங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம் ஹால் போன்ற வசதிகளும் இந்த சொகுசுக் கப்பல் பேக்கேஜில் உள்ளன.