கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

846

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. அதேபோல தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்நோய் வருகிறது. இதிலிருந்து கோவிட்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என்பது தெளிவாகிறது.

வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் பயணத்திற்கு முன் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.