சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் கட்டிடங்கள் – வீட்டு வாடகை உயரும் அபாயம்!

Share this News:

ஜித்தா (13 நவ 2021): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பல பழைய புதிய கட்டிடங்கள் பெருமளவில் இடிக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் ஷராஃபியா மற்றும் பாக்தாதியாவில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

சவூதி அரேபியாவில் ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட சவுதி கட்டிடக் குறியீடு திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன..

இடிக்கப்படும் கட்டிடங்கள் மூன்று கட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இடிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

கட்டிடங்கள் இடிக்கபப்டுவதால் பலர் புதிய கட்டிடங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் வாடகையும் உயர்ந்துள்ளது.


Share this News:

Leave a Reply