கொரோனாவால் உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு!

1835

ரியாத் (08 ஆக 2021): சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுதியில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அனைத்து சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு , 5 லட்சம் சவூதி ரியால் (1 கோடி ரூபாய்) வழங்கப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிக்கை நிறுவனம் (SPA) செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் தவிர சிவில் அல்லது இராணுவத் துறைகளில் பணியாற்றியவர்களுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.