தமிழகத்தில் மின்வெட்டே இல்லை. சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளா முதல்வர் உம்மன் சாண்டி உயிர் தப்பினார்.

பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேட்ச் ஃபிக்சிங் பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி நாளிதழுக்கு இந்திய கேப்டன் தோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாதுகாப்பு பணியின் போது பனிச்சறுக்கில் சிக்கி 6 நாட்களுக்கு பின் இராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.

பெங்களூரில் பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்த காரணத்தினால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல் பாதிப்பினால் சிகிட்சை பெற்று வந்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

கடந்த 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் சராசரியாக சுமார் 86,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 26 தங்க கட்டிகளும், ரூ.8லட்சம் மதிப்பிலான 8 தங்க வளையல்களும் சுங்க இலாகாத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!