இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

Share this News:

ஜெரூசலம் (02 ஏப் 2020): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனிமை படுத்தப் பட்டுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டதை அடுத்து உலகின் பல தலைவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்தார். எனினும் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. எனினும் மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply