பாலஸ்தீன் காஸாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

காஸா (31 மார்ச் 2021): காஸாவில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு இது அதிக அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்படுத்தப்பட்ட கடலோர பாலஸ்தீனிய
“காசா பகுதியில் இது அதிகமாக உள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பராமரிப்பு துணை இயக்குனர் மேகி தாஹிர் கூறினார்

காசாவில், 65,500 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 610 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதேபோல மேற்குக் கரையில், 175,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,004 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை காலை வெளியிட்ட நிலவரப்படி, மேற்குக் கரையிலும் காசாவிலும் 69,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி வசங்கப்பட்டதாக அறிவித்தது.

அதேவேளை இஸ்ரேலின் சுமார் 9.3 மில்லியன் குடியிருப்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் சமீபத்திய தினசரி கொரோனா அதிகரிப்பு 442 வழக்குகள் ஆகும், இது மார்ச் மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கானதாக இருந்தது.

பாலஸ்தீனியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு உரிமைகள் குழுக்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன. சில பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் குறைந்த அளவு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, ஆனால் பொது தடுப்பூசி பிரச்சாரத்திற்கு பாலஸ்தீனிய ஆணையமே பொறுப்பு என்று இஸ்ரேல் கூறியுள்ளது.


Share this News:

Leave a Reply