கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

Share this News:

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

ரியாத் (15 டிச 2021): இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் சவூதி சுகாதார அமைச்சகத்தின் தவக்கல்னா அப்ளிகேசனில் பதிவு செய்யலாம். இதன் மூலம் கோவாக்சின் பெற்றவர்களுக்கு தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை காட்டப்படும். சுற்றுலா (விசிட்டிங்) விசா வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழ்களுக்காக பதிவு செய்யலாம்.

ஏற்கனவே சவூதி அரேபியாவில் ஃபைசர், மொடெனா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனிகா அல்லது கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள்அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளன.

இந்நிலையில் சைனோஃபார்ம், சினோவாக் மற்றும் கோவாக்சின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொண்டவர்கள் சவூதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் கோவாக்சின் பெறுபவர்கள் இதுவரை தங்கள் தடுப்பூசி சான்றிதழை சவூதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்ய முடியாமல் இருந்தது. அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் சான்றிதழை சவூதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்தால், தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை நிரூபிக்கப்படும். வருகையாளர் விசாவில் சவூதி அரேபியாவிற்கு வருபவர்கள் தங்கள் பாஸ்போர்ட் எண் மற்றும் பார்டர் எண்ணைப் பயன்படுத்தி தடுப்பூசி தகவல்களையும் பதிவு செய்யலாம்.

அதேபோல தற்போது சவூதி அரேபியாவில் சுற்றுலா விசாவில் இருப்பவர்கள் தடுப்பூசி சான்றிதழுக்கு பதிவு செய்வதற்கு முன் அப்ஷர் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


Share this News:

Leave a Reply