ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

365

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நில நடுக்கம்!

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.