ஓட்டுநர் இல்லாத மின் பேருந்துகளை இயக்க கத்தார் அரசு திட்டம்!

Share this News:

தோஹா (04 நவ 2021): கத்தார் தெருக்களில் ஓட்டுநர் இல்லாத மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து அமைப்புகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கத்துடன் முழு தானியங்கி மின்சார மினி பேருந்துகளை அறிமுகப்படுத்த கத்தார் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக முழு தானியங்கி மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றியடைந்தால், Fifa உலகக் கோப்பையில் பார்வையாளர்களுக்காக இ-மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான யுடோங், கத்தாரின் பொது போக்குவரத்து அமைப்பான முவாஸ்ஸலாத் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக யுடோங்கின் தானியங்கி மினிபஸ் தோஹாவில் சோதனை ஓட்டத்தை தொடங்கியது. ஒரு மாத கால சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், நவம்பர் இறுதியில் தொடங்கும் FIFA உலகக் கோப்பையில் இ-மினி பேருந்துகள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், இந்த போக்குவரத்து முறையை அமல்படுத்தும் முதல் நாடு என்ற பெருமையை கத்தார் பெறும்.

முழுமையாக ரேடார் மூலம் கட்டுப்படுத்தப்படும் மின்சார மினிபஸ் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்க முடியும்.

பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார்-கட்டுப்பாட்டு கேமராக்கள் முன்னால் உள்ள பொருட்களைக் கண்டறிந்து பாதுகாப்பான பயணத்தை செயல்படுத்துகின்றன. பேருந்தின் முன்பகுதியில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை கண்டறிந்து வேகத்தை கட்டுப்படுத்தவும், பயணிக்கவும் முடியும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஓட்டுநர் இல்லாவிட்டாலும், பேருந்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு தொழில்நுட்பப் பணியாளர் இருப்பார். இது அதிக செயல்திறன் கொண்ட பேட்டரிகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் நாற்பது கிலோமீட்டர்கள் வரை முழு திறனில் இயங்கும்.

தோஹாவில் நடந்த இப்பேர்நுதின் சோதனை ஓட்டத்தின் தொடக்க விழாவில் போக்குவரத்து அமைச்சர் ஜாசிம் சைஃப் அல் சுலைதி மற்றும் யுடோங் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Share this News:

Leave a Reply