துபாயிலிருந்து புறப்படும் விமான சேவைகள் இடமாற்றம்!

1172

துபாய் (25 டிச 2020): கோவிட் காட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக துபாயிலிருந்து புறப்படும் விமானங்கள் ராஸல் கைமாவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. துபாயிலிருந்து கொச்சி, கோழிக்கோடு மற்றும் மங்களூர் ஆகிய விமானங்களுக்கு இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிளுக்கான விமானங்களும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும். இதன் ஒருபகுதியாக அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து பயணிகளுக்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சிறப்பு பேருந்து சேவைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

ஷார்ஜா – கொச்சி, ஷார்ஜா -கண்ணூர், ஷார்ஜா- விஜயவாடா விமானங்களும் நேற்று மற்றும் இன்று ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்பட்டன. ஸ்பைஸ்ஜெட்டின் சில சேவைகள் வெள்ளிக்கிழமை ராஸ் அல் கைமாவிலிருந்து புறப்படும் என்று விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.