குவைத்தில் திடீர் நிலநடுக்கம்!

1279

குவைத் (02 ஆக 2021): வளைகுடா நாடான குவைத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் திங்கள் கிழமை காலை 11:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.5 ஆக பதிவாகியுள்ளது.

குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதேபோல் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாகவும் தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இவ்வருடம் முதல் தமிழிலிலும் கேட்கலாம்!