மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

1383

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது அல்லது பிற உரிமம் பெறாத பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தக்கூடாது. மானியம் பெற தகுதியில்லாதவர்கள் அத்தகைய பொருட்களை சொந்தமாக வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்தை மீண்டும் செய்தால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.