துபாய் எக்ஸ்போவில் ஏர்.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மானின் முதல் லைவ் ஆர்கெஷ்ட்ரா நிகழ்ச்சி!

Share this News:

துபாய் (19 நவ 2021): துபாய் எக்ஸ்போவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் முதல் நேரடி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

உலக குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கதீஜா ரஹ்மான் நாளை மாலை 3 மணி முதல் ஜூப்ளி பூங்காவில் பாடுகிறார். இதே நிகழ்ச்சியில் 16 வயது பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் பன்கேற்கிறார்.

கதீஜா AR ரஹ்மான் உருவாக்கிய ஃபிர்தௌஸ் இசைக்குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். பிரபலமான டிஸ்னி கிளாசிக்ஸின் பின்னணி இசையை இந்நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நிகழ்த்துவார்கள்.

இதுகுறித்து கதீஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு நேரடி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக நான் மேடையேறுவதால் சற்று பதற்றமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply