துபாயில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு!

துபாய் (12 மே 2020): துபாயில் மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஹோட்டல், கடற்கரை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் சில விதிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வெளிப்புற இடங்களிலும் 5 அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நீச்சல், ஜிம், உடற்பயிற்சி இடங்கள், அழகு நிலையைங்கள், குழந்தைகள் விளையாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

மேலும் வெளிப்புற விளையாட்டுகளில் ஐந்து அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

Source: Gulf news

ஹாட் நியூஸ்:

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது – குஜராத் அரசு!

புதுடெல்லி (03 டிச 2022): 2002 குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க முடியாது என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு...

சாக்லேட்டில் விஷம் -மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (04 டிச 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அடையாளம் தெரியாத நபர் மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டில் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் வழங்கிய சாக்லேட் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு உணவு...

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக...