கொரோனவை பரப்பும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கைது!

358

அபுதாபி (14 பிப் 2021): அபுதாபியில் கோவிட் பாசிட்டிவ் ரிபோர்ட்டுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கொரோனாவுடன் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பில், தனது மொபைல் தொலைபேசியில் பெறப்பட்ட கோவிட் நேர்மறை சோதனை முடிவை எடுத்துக்காட்டுகிறார்.

அதேபோல இன்னொருவர் பொது இடத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். வீடியோ கிளிப்பைப் பார்த்த அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்கள் கோவிட் பாதுகாப்பு நடைமுறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று துபாய் அரசு எச்சரித்துள்ளது. மீறுபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 டாலர் முதல் 50,000 டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொறுப்பற்ற நிலையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் துபாயில் கைதுசெய்யபப்ட்டுள்ளனர்.