ஹாஜிகளுக்கான தொடர் சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் (IFF)

மக்கா (08 ஜூலை 2022): அரஃபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரஃபா (வில் தங்குவது) தான்.* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி)

அரஃபாவிற்கு வருகை தந்த அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளை வரவேற்று அரஃபாவில் அவர்களுக்கு தேவையான பணிவிடைகளையும், நடக்க முடியாத ஹாஜிகளை வீல்சேரில் அமர வைத்து அழைத்து சென்று உதவிகள் செய்து வருவதோடு அதனைத் தொடர்ந்து முஸ்தலிபா மினா மற்றும் ஹரம் ஷரீஃபிலும் தொடர் சேவையாற்ற தயார் நிலையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் முன்னிலையில் உள்ளார்கள்

ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் துவக்கத்திலிருந்தே மக்கா, அசீஸியா, மினா, அரஃபா என்று எல்லா இடங்களிலும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் தொடர் சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: