ஹாஜிகளுக்கான சேவையில் அனைத்து இடங்களிலும் (IFF) இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்!

620

மக்கா (10 ஜூலை 2022): ஹாஜிகளுக்கான சேவையில் துவக்கம் முதலே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வரும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹரம், அஸீஸியா, மினா, அரஃபா, முஸ்தலிபா என்று எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன் று அதிகாலையில் மேலும் 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஜித்தாவில் இருந்து புறப்பட்டு சென்று இறைவனின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு பணியாற்ற இணைந்துள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹாஜிகள் தங்களின் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் இடங்களிலெல்லாம் அவர்களுக்கான உதவிகள் வழிகாட்டல்கள் தேவைகளை உடனுக்குடன் செய்து அவர்களின் ஹஜ் கடமைகள் சிரமின்றி எளிதாக அமைய தொடர் சேவையாற்றி வருகின்றன