இந்திய செவிலியர் சவூதி ஜித்தாவில் திடீர் மரணம்!

ஜித்தா (13 டிச 2020): சவூதி ஜித்தாவில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர் மஞ்சு மாரடைப்பால் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கண்ணுரை சேர்ந்த மஞ்சு வர்கீஸ் (37) ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். மஞ்சவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அனைவரும் இந்தியாவில் உள்ளனர்.

மஞ்சு 10 வருடங்களாக சவுதியில் பணிபுரிந்து வந்தார் என்பதும், கடந்த 4 வருடங்களாக ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி முன்னிலை!

புதுடெல்லி (07 டிச 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்தபடி ஆம் ஆத்மி கட்சியே முன்னேறி வருகிறது. ஆம் ஆத்மி 86 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும்,...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட்...

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக - ஆந்திரா...