ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் முக்கிய உணவு கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக குவைத்தின் பாரம்பரிய வர்த்தக மையமான முபாரக் சந்தையை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அங்கு வந்த அதிகாரிகள் குழு இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலை வசூலிக்கக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். தரமற்ற, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோரை ஏமாற்றும் வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆய்வுகளை செயல்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே மளிகைக் கடைகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகள் உட்பட அனைத்து உணவு விற்பனை நிலையங்களையும் ஆய்வாளர்கள் பார்வையிடுவார்கள். கெட்டுப்போன பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது போன்றவற்றில் பிடிபட்டால், கடும் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடைகளை முழுவதுமாக மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என வர்த்தக அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேலும் சந்தை விலையைக் கண்காணிக்க அரசு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர்...

நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்”...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் – யாருக்கு எந்தெந்த துறை?

சென்னை (07 டிச 2022): தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகப்...