சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

927

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இருப்பினும், சவுதி அரேபியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊர் சென்றவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

விசா புதுப்பித்தலுக்கு Javasat அலுவலகம் அல்லது வேறு எதையும் தொடர்பு கொள்ள தேவையில்லை.

இதற்கிடையே இந்தியாவிலிருந்து டிசம்பர் 1 முதல் நேரடியாக சவூதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியர்களுக்கு புதிய பலன் கிடைக்குமா என்பதைப் பார்க்க புதுப்பித்தல் செயல்முறை தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும்