சவுதியில் இக்காமா காலாவதியானவர்கள் அபாரதமின்றி ஊர் செல்ல மீண்டும் வாய்ப்பு!

Share this News:

ரியாத் (06 ஜூலை 2021): சவுதி அரேபியாவில், இகாமா காலாவதியாகி புதுப்பிக்க முடியாமலும் எக்சிட்டில் ஊர் செல்ல முடியாமலும் இருப்பவர்கள் எந்தவித அபராதமும் இன்றி ஊர் செல்லலாம் என்ற விதிமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதி ரேபியாவில் இக்காமா கலவாதியானர்வகள் அபராதம் எதுவும் இன்றி உடனடியாக ஊர் செல்லலாம் என்கிற விதிமுறையை இதுவரை யாரும் சரிவர பயன்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும் கலவை அடைந்துள்ளனர்.

இந்த விதிமுறை திரும்பப்பெறப்பட்டால் அபராதம், சிறைத் தண்டனை போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனபதால், இக்காமா காலாவதியாகி ஊர் செல்லமுடியாமல் இருப்பவர்கள் அவரவர்களின் இக்காமா வழங்கப்பட்ட தொழிலாளர் அலுவலகங்களில் இதற்கென உள்ள படிவத்தை அரபியில் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இந்திய தூதரகத்தின் முத்திரை பெற்று அதனை மீண்டும் தொழிலாளர் அலுலவகத்தில் சரமர்ப்பித்தால் எந்தவித அபராதமும் இன்றி ஊர் செல்லாம்.

அனால் இந்த விதிமுறையை பலர் இதுவரை பயன்படுத்தவில்லை என்று சவூதி அரேபியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே இதுபோன்று இக்காமா காலாவதியானவர்கள் கைது,தர்ஹீல் போன்ற சிக்கல்களில் சிக்காமல் உடனடியாக ஊர் செல்ல முயற்சி மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை ஹூரூப், மேட்லூப் (வழக்குகள்)போன்ற சட்ட சிக்கலில் இருப்பவர்கள் இந்த விலக்கு பெற முடியாது. அவர்கள் மீது உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பின்னரே இந்த விதிமுறைகளை பின்பற்ற முடியும்.


Share this News:

Leave a Reply