ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு!

778

ஈரான் (28 பிப் 2020): ஈரான் துணை அதிபரும், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறையை கவனித்து வருபவருமான மௌசூமே எப்தேகாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவைத் தொடர்ந்து தற்போது ஈரானிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால், அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் வைரஸ் பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரானில் கரோனா வைரஸ் பாதித்த 26 பேர் மரணம் அடைந்தனர். தற்போது 245 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகா​தா​ரத் துறை இணையமைச்​ச​ரும், கரோனா வைர​ஸுக்கு எதி​ரான திட்ட அமைப்பின் தலைவருமான இராஜ் ஹரீா்​சியைத்துக்கும் கொரோனா பாதித்தது குறிப்பிடத்தக்கது.