கீழை சவுதி அமைப்பின் – கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு!

399

மக்கா (23 ஜூலை 2022): புனித மக்கா மாநகரில் கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரையில் இருந்து வருகை தந்த ஹாஜிகள் மற்றும் கீழை. சவுதி அமைப்பு நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கீழக்கரை பண்டைய வரலாறு மற்றும் கீழக்கரை மக்கள் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு திட்டமிடுதல் மற்றும் கீழக்கரை பெண்களுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்பாடு செய்வது என்றும், கீழக்கரை நலன் கருதி பல விசயங்கள், கருத்துகள் பரிமாற்றம் செய்யபட்டது.

அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.

கீழை. சவுதி அமைப்பு சார்பாக ஹாஜிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.