முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் 1முதல் குவைத் வர அனுமதி!

Share this News:

குவைத் (18 ஜுன் 2021): முழுமையாக தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் ஆகஸ்ட் முதல் குவைத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மெடோனா அஸ்ட்ரா சேனகா மற்றும் ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும், ஜான்சன் & ஜான்சன் ஒரு டோஸையும் பூர்த்தி செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அனுமதி வழங்கப்படும்

குவைத் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும். குவைத் வந்ததும், ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தலில் தங்கவும். தனிமைப்படுத்தல் நிறுத்தப்படுவதற்கு முன்பு பி,சிஆர் சோதனை செய்யப்பட வேண்டும்.

மேலும் ஆகஸ்ட் 1 முதல், தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பூர்த்தி செய்யாத வெளிநாட்டவர்களுக்கு விசாக்கள் புதுப்பிக்கப்படாது. இரவு 8 மணிக்கு வணிக நிறுவனங்களை மூடுவதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும்.

மேற்கண்ட தகவலகளை அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்தம் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply