மொபைல் மூலம் வாங்கி மோசடி செய்த 5 பேர் கைது – அபுதாபி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

485

அபுதாபி (18 பிப் 2021): தொலைபேசி மூலம் வாங்கி கணக்குகளில் பணம் கொள்ளையடித்த கும்பல் ஐந்து பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தொலைபேசிகள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிந்துள்ளது.

இவர்கள் கணக்கு இலவசம் என்று கூறி அவர்கள் பலரை தொலைபேசி மூலம் அழைப்பார்கள். பின்பு வங்கி கணக்குத் தகவல்களையும் கடவுச்சொற்களையும் கையகப்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பறிப்பதே அவர்களின் செயல். இவர்களை அபுதாபி போலீசார் அஜ்மான் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆசியர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அபுதாபி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அபுதாபி காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது . உங்கள் வங்கி விவரங்களை தொலைபேசியில் புதுப்பிக்க வங்கிகள் ஒருபோதும் கேட்காது. நேரடியாக வங்கி ஊழியர்கள் மூலமாகவும் கிளைகளிலும் இதைச் செய்வது பாதுகாப்பானது. சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.