குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனை அவசியம்!

Share this News:

ரியாத் (07 ஜன 2022): குழந்தைகளுக்கு பரசிடமால் மருந்து கொடுக்கும் முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெற்று கொடுக்க வேண்டும் என்று சவூதி உணவு மற்றும் மருந்து அமைப்பு எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பான நோய்கள் மற்றும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுமாறு சவூதி உணவு மற்றும் மருந்து நிர்வாகம்,பெற்றோர்களை எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும் பாரசிடமால் மருந்தின் அளவுகள் அவற்றின் எடை மற்றும் மருந்தின் செறிவுக்கு ஏற்ப மாறுபடும். இதற்கு சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை சரியான அளவு வழங்குவதன் மூலம் அதிக அளவு மருந்து வழங்குவதன் காரணமாக ஏற்படும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை மருந்து கொடுக்க வேண்டும், தேவையான அளவு, எத்தனை நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நிபுணரால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். பாராசிட்டமால் கணக்கீடு மூலம் ஒவ்வொருவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற அளவை மருத்துவர்கள் மட்டுமே கணக்கிட முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Share this News:

Leave a Reply