வளைகுடா நாடுகளுக்காக துபாயில் நீட் தேர்வு மையம்!

Share this News:

துபாய் (24 ஜூலை 2021): வளைகுடா நாட்டு மாணவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குவைத்தில் நீட் தேர்வு மையம் உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர, பிற வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக துபாயில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

துபாயில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் துபாயில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

சவூதி அரேபியா, கத்தார், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் துபாயில் தேர்வெழுத முடியும். அதேவேளை கோவிட் காரணமாக உள்ள பயணக்கட்டுப்பாடுகள் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் வளைகுடா மாணவர்களை கவலை அடையச்செய்துள்ளது.


Share this News:

Leave a Reply