இஸ்ரேலில் முடிவுக்கு வந்த நெதன்யாகுவின் ஆட்சி!

Share this News:

ஜெருசலேம் (14 ஜூன் 2021): இஸ்ரேலின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.

இந்நிலையில் அரபு கட்சி தலைமையில் 8 காட்சிகள் கூட்டணி அமைத்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

மேலும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் யமினா கட்சி தலைவர் பென்னட் வெற்றிப்பெற்றதை அடுத்து, அவர் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.


Share this News:

Leave a Reply