வெளிநாட்டு ஹஜ் உம்ரா யத்ரீர்கர்களுக்கு மேலும் புதிய வசதி ஏற்பாடு!

ஜித்தா (18 நவ 2021): வெளிநாட்டில் இருந்து நேரடியாக உம்ரா யாத்திரைக்கான அனுமதி பெற்றவர்கள் பேருந்து சேவையையும் தவக்கல்னா என்கிற அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம்.

இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதை சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

புதிய சேவைகள் வெளிநாட்டிலிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்ரீகர்கள். பயன்பாட்டில் உள்ள தவக்கல்னா ஆப்பில் ஹஜ் உம்ரா சேவையில் அனுமதி வழங்கல் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதில் இருந்து எந்த பெர்மிட்கள் எடுக்க வேண்டும் என்பது இருக்கும் அதில் தேவையான பெர்மிட்டுகளை தேர்வு செய்து. வாடிக்கையாளரின் பெயரையும் உள்ளிட வேண்டும்.

மக்காவிற்கு பேருந்துகள் செல்ல பல்வேறு நிலையங்கள் உள்ளன. எனவே தவக்கல்னா ஆப்பில் உங்களுக்கு வசதியான பேருந்து நிலையத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் தேவையான உள்ளீடுகளை வழங்கி வழங்கப்பட்ட அனுமதி இணைப்பில் கிடைக்கக்கூடிய அனுமதியைப் பார்க்கலாம். இதைக் காட்டிவிட்டு பேருந்தில் ஏற வேண்டும்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...