கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு புதிய சிக்கல் – ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை!

Share this News:

ரியாத் (22 ஜூலை 2021): சவுதியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

அதாவது கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து நிறுவனங்கள், கடைகள், மால்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சவூதியின் தவக்கல்னா அப்ளிகேஷனில் தடுப்பூசி பெற்ற அல்லது நோயெதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்படலாம்.

அதேபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி பெற்றவர்கள், சவூதி அனுமதித்துள்ள தடுப்பூசிகளை பெற்றதற்கான சான்றிதழ்களை சமர்பித்து தவக்கல்னா அப்ளிகேஷனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு பதிவாகவில்லையெனில், வெளியிலோ அல்லது பொது இடங்களுக்கோ பணி செய்யும் இடங்களுக்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்


Share this News:

Leave a Reply