ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – லாக்டவுன் உண்டாகுமா? -சவூதி அரேபியா விளக்கம்

Share this News:

ரியாத் (03 டிச 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருந்தபோதும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுக்காது என்று அந்நாட்டு சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி  போட்டு முடித்துள்ளனர், எனவே கவலைப்பட எதுவும் இல்லை என சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டால் மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய வைரஸ்கள் தொடர்ந்து வருவதாகவும், தடுப்பூசி போடுவதே ஒரே வழி என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​சவூதி அரேபியாவில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முழுமையடையவில்லை. எனவே, அவர்களின் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதரத்துறை நினைவூட்டியுள்ளது.

சவுதி அரேபியா முன்பு பொது இடங்களில் மட்டும் முகமூடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது விழிப்புணர்வின் ஒரு பகுதியாக எல்லா இடங்களிலும் முகமூடிகளை அணியுமாறு சுகாதார அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நேற்றைய சூழலில் சவூதி அரேபியாவில் 24 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply