பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

Share this News:

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த தடை தொடர்கிறது.

இந்நிலையில் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹிஷாம் பின் சயீத், சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் (ஜிஏசிஏ) அறிவுறுத்தல்களின்படி தடைசெய்யப்படாத நாடுகளிலிருந்து மட்டுமே உம்ரா யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

சுமார் 500 உம்ரா சேவை நிறுவனங்கள் மற்றும் 6,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா முகவர்கள் தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களைப் பெற தயாராக உள்ளனர். முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே வெளிநாடு மற்றும் உள்நாடுகளிலிருந்து உம்ராவிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உம்ரா பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே, உம்ரா விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் , உம்ராவிற்கு வருபவர்களின் உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும். என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply