கத்தார் நாட்டில் துவங்கியது தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு!

2655

தோஹா (27 ஜன 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டில் வரும் திங்கள் கிழமை (இன்று) முதல் தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு துவங்குகிறது.

தேசிய முகவரிச் சட்டம் (National Address Law) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்தப் பதிவேடு மூலம், கத்தர் நாட்டுப் பிரஜைகள் மற்றும் கத்தரில் தங்கியுள்ள வெளிநாட்டவர் அனைவரும் இன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும்.

இதனை உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். இதற்குரிய விண்ணப்பப் படிவங்கள் இங்கே கிடைக்கும்.

இயலாதோர் மெட்ராஷ்2 ஆப் (Metrash2) மூலம் மிக எளிதாக இருந்த இடத்திலிருந்தே, ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.

இதைப் படிச்சீங்களா?:  சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை - பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

என்னென்ன தகவல்கள் கொடுக்க நேரிடும்?

  • கத்தரில் வசிக்கும் நபரின் பெயர்
  • அவரது அடையாள அட்டை எண்
  • தங்கியுள்ள முகவரி
  • தொடர்பு எண்கள்
  • வேலை செய்யும் இடம் பற்றிய தகவல்
  • சொந்த நாட்டு முகவரி (வெளிநாட்டவர் எனில்)
  • கூடுதல் விபரங்கள்

எதிர்வரும் ஜூலை 6, 2020 இந்த பதிவேட்டிற்கான இறுதி நாள் என அறிவிக்கப் பட்டுள்ளது.

கெடு காலம் முடிந்த பின்னரும் பதிவு செய்யாமல் இருப்போர் பத்தாயிரம் கத்தார் ரியால்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்ச ரூபாய்கள்) அபராதம் செலுத்த வேண்டும். அத்துடன் அவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கத்தர் நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.