ஹாஜிகளுக்கான சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் பெண் தன்னார்வலர்கள்!

693

மக்கா (11 ஜூலை 2023): ஹாஜிகள் தங்கள் புனித பயணத்தை மனநிறைவோடு பூர்த்தி செய்து முடிக்க அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள்

காணும் இடங்களில் எல்லாம் IFF-ன் தன்னார்வலர்களை ஹாஜிகள் எளிதாக அணுகுகிறார்கள் உதவி கேட்கும் ஹாஜிகள் வேறு மொழி என்று அறிந்தால் இத்தன்னார்வலர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடுத்து மூன்று நிமிடத்தில் ஹாஜியின் தாய்மொழி தன்னார்வலர் வந்து விடுகிறார் இதனைப் பார்க்கும் ஹாஜிகள் மகிழ்ச்சியோடு பிரார்த்தித்து வாழ்த்துகிறார்கள்

ஒட்டுமொத்த (இந்திய) ஹாஜிகளையும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்களையும் இனம் மொழிகளை கடந்து இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவமே இணைக்கிறது என்றால் அது மிகையல்ல.

மேலும் இறைவனின் விருந்தினர்களை கனிவுடன் கவனிப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று *இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் பெண்கன் பிரிவு தன்னார்வலர்கள் 75-க்கு மேற்பட்டோர் ஹாஜிகளுக்கான சேவையில் தங்களை ஈடுபடுத்தி பணிவிடை செய்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களை குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்த்து புனித தலங்களில் சேவையாற்றும் அந்த சகோதரிகளின் செயல்கள் அனைவரின் பாராட்டையும் வெகுவாக பெற்றுள்ளது