2021 ஆம் ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி!

Share this News:

ஜித்தா (21 மே 2021): உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அல்-வதன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாரும் மக்காவிற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ்ஜிற்காக கூடுவர். ஆனால் கடந்த ஆண்டு 1000 உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சென்ற ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர சவூதி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுடன் வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்களை அனுமதிக்க சவுதி அரசு முடிவெடுத்துள்ளது.

அதேபோல அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..


Share this News:

Leave a Reply