சவூதிக்கு பணிபுரிய செல்பவர்களுக்கு இந்திய காவல்துறை கிளியரன்ஸ் அவசியம்!

403

ஜித்தா (12 ஜூலை 2022): : சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் அனைத்து இந்தியர்களும் சவுதி இந்தியாவின் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிக்க வேண்டும்.

மும்பையில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகம், எந்தவொரு வேலைவாய்ப்பு விசா ஒப்புதலுக்கும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்குமாறு பயண முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய விதி ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டாய பிசிசி விதிமுறை ஏற்கனவே டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சில காலமாக இருந்தது, அது மும்பையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே இந்த முறை வளைகுடாவின் குவைத்தில் அமலில் உள்ளது. தற்போது சவுதியிலும் இதே முறை பின்பற்றப்படவுள்ளது.