இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது.

இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும்.

இதைப் படிச்சீங்களா?:  பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் - சவுதி அரேபியா அறிவிப்பு!

Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம்.

இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.