செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

Share this News:

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19 தடுப்பூசிகள் சில நாடுகளில் பல கட்ட சோதனைகளைக் கடந்து உறுதி செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக்கும் கட்டத்தை எட்டியுள்ளன. அவை சந்தைக்கு வந்தவுடன் கத்தாருக்கு தாமதமின்றி கொண்டு வருவோம். இதற்காக 4,5 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன்படி கோவிட் தடுப்பூசியை, முதலில் அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்

பொதுவாக ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து முழுமை அடைய 12 முதல் 18 மாதங்களாகும், ஆனால் கோவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் அடுத்த சில மாதங்களுக்குள் நல்ல செய்தி வரும் என்றும் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply