கொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை!

கத்தார் (18 ஜூலை,2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது.

அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிகளவு கொரோனா பாதிப்பைக் கொண்டிருந்த நாடு கத்தார் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமான் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் 50,000 க்கும் அதிகமான மொத்த கொரோனா பாதிப்புகளைக் கொண்டிருந்தாலும் சவூதி அரேபிய-வுக்கு அடுத்தபடியாக கத்தார் நாட்டில் இதுவரையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Qatar tops In Corona Cure
Qatar tops In Corona Cure

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த வாரம் ஜூலை 13 வரை உள்ள புள்ளி விவரக் கணக்கின்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 1,04,016 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், அந்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,04,016 மக்களில் 1,00,627 பேர் முழுவதுமாக குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது அந்நாட்டில் 3,240 பேர் மட்டுமே கொரோனா-விற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அந்நாட்டில் கொரோனாவிற்காக செய்யப்பட்ட மொத்த சோதனைகள் 4,16,327 ஆகவும் இதுவரையிலும் அந்நாட்டில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கையானது 149 ஆகவும் உள்ளது. உலகளவில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் குறைந்த அளவு இறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் கத்தார் நாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஹாட் நியூஸ்:

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு...

நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் – பில்கீஸ் பானு திட்டவட்டம்!

ஆமதாபாத் (02 டிச 2022): எனக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது. நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று பில்கீஸ் பானு தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு தனது கூட்டுப் பலாத்காரம்...

சவூதியில் பெற்றோர் ஸ்பான்ஷர்ஷிப்பில் உள்ள 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

ரியாத் (07 டிச 2022): சவூதியில் பெற்றோர் ஸ்பான்ஷர்ஷிப்பில் உள்ள 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாஸ்போர்ட் துறை தெரிவித்துள்ளது அதேபோல திருமணமான பெண்கள் கணவரின் பெயருக்கு...